Publish Date: Wed, 27 Oct 2021 (11:15 IST)
Updated Date: Wed, 27 Oct 2021 (11:43 IST)
டிடிவி தினகரனின் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதையடுத்து இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மகள் ஜெயஹரினிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசிக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.
இந்த திருமணம் ஜூன் மாதமே நடக்க இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போன நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தில் சசிகலா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து இன்று தஞ்சாவூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் சசிகலா கலந்துகொள்ள உள்ளார்.