Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார தொடுற...சாத்திட்டு கிளம்பு: அடங்க மறுக்கும் சர்கார் படக்குழு

Advertiesment
யார தொடுற...சாத்திட்டு கிளம்பு: அடங்க மறுக்கும் சர்கார் படக்குழு
, திங்கள், 12 நவம்பர் 2018 (13:38 IST)
சர்கார் பட சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் மிக்ஸி, கிரைண்டர் அடங்கிய கேக்கை வெட்டியது அதிமுகவினரை கொந்தளிப்படையச் செய்துள்ளது.
 
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் மிக்ஸி, கிரைண்டர் உள்பட இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு அதிமுகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்ததால் அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'சர்கார்' வெற்றிவிழா கொண்டாடத்தின் போது வெட்டப்பட்ட கேக்கில் சர்கார் என்ற வாசகம் எழுதப்பட்டதோடு அதை சுற்றி மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்கள் கேக்கில் இடம்பெற்றிருந்தது. 
webdunia
 
இப்படத்தில் இடம் பெற்றுள்ள டாப்பு டக்கரின் பாடல் வரிகளில் யார தொடுற பாத்து வரனும், சாத்தி கிளம்பு காத்து வரனும், ஹிட் ஆனா பிட் ஆவா வாடா என்ற வரிகள் போல படக்குழுவினர் ஒரு பக்கம் காட்சிகளை நீக்கியிருந்தாலும் கூட அதிமுகவினரை கடுப்பேற்றவே இப்படி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா?