Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்க என்ன பிச்சகாரங்களா? சீறும் கமல்

நாங்க என்ன பிச்சகாரங்களா? சீறும் கமல்
, ஞாயிறு, 11 நவம்பர் 2018 (14:20 IST)
சர்கார் படத்தில் இலவசங்கள் தீயில் போட்டு எரிப்பது போன்ர காட்சி இடம்பெற்றதை அடுத்து இதற்கு அதிமுகவினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டு ரகளையுடம் நடந்தது. 
 
அப்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலவருமான கமல்ஹாசன், முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. 
 
விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தார். 
 
தற்போது படத்தில் இருந்த அந்த காட்சி நீக்கப்பட்டு பிரச்சனை முடிந்துள்ள நிலையில், கமல் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற போது பின்வருமாறு பேசினார், 
 
உழைக்கும் மக்களின் பணம்தான் அரசின் கஜானாவை நிரப்புகிறது. அதை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் எடுத்து காலி செய்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
 
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. மக்களின் பணத்தை ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியை தேர்தலின் போது வாக்குகளை பெறுவதற்காக மக்களுக்கே திருப்பி கொடுக்கின்றனர். 
 
பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை. உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற இலவசங்கள் வேண்டாம் என கமல்ஹாசன் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் என்னை தேடி வருவார்கள்... 6 மணி நேரத்திற்கு இவ்வளவா?