Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வாசம் பட உரிமையை கைப்பற்றிய சர்கார் பட நிறுவனம்!

Advertiesment
விஸ்வாசம் பட உரிமையை கைப்பற்றிய சர்கார் பட நிறுவனம்!
, ஞாயிறு, 11 நவம்பர் 2018 (17:12 IST)
சிறுத்தை  சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் (A and P groups) எனும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
 
தீபாவளிக்குத் திரைக்கு வந்த விஜய்யின் சர்கார் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது.  இந்தப் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது விஸ்வாசம் படத்தையும் இதே நிறுவனமே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிகாவின் 'ஜிமிக்கி கம்மல்' டான்ஸ்- ஆர்வம் காட்டும் ரசிகர்கள்