Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐசிசி- ன் சிறந்த வீரராக சுப்மன் கில் அறிவிப்பு

Advertiesment
subman gil
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (19:48 IST)
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளை அறிவித்து வருகிறது. அதன்படி, ஜனவரி சிறந்த வீரராக இந்திய வீரர் சுப்மன் கில்லை அறிவித்துள்ளது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம்வீரர் சுப்மன் கில். இவர், கடந்தாண்டு வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

அதன்பின்னர். கடந்த ஜனவரி மாதம் இலங்கை மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். அதேபோல் 3 வது ஒரு நாள் போட்டியிலும் 112 ரன் கள் ஐத்தார்.

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தன் திறமையை நிரூபித்த கிப்பன் ஆஸ்திரெலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில்,  ஐசிசி அமைப்பு, ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரரான சுப்மன் கில்லை அறிவித்துள்ளது.

எனவே, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற அயர்லாந்து எடுத்த அதிரடி முடிவு..!