Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை வெள்ளம் எதிரொலி: சேலம் திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைப்பு..!

Advertiesment
சென்னை வெள்ளம் எதிரொலி: சேலம் திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைப்பு..!
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (12:53 IST)
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அந்த மாநாடு டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து திமுக இளைஞரணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்  2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநாட்டினை தொடர்ந்து வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற இருந்தது. 
 
இந்த நிலையில் மழை காரணமாக ஒரு வார காலத்திற்கு இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 25 நான்காம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக சேலத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்காக  கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 நாட்கள் 8,647 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.
 
234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வந்து சேலத்தில் பேரணி நிறைவடையும் என்றும், பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்கிறது என்றும் திமுக இளைஞரணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி கர்ப்பமான 2 மாதத்தில் கொழுந்தியாவும் கர்ப்பம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!