சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நேற்று 50 வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 150 வாகனங்களும் இயக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	நடமாடும் காய்கறி நிலையத்தில் அரை கிலோ காய்கறி 20 ரூபாய் என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி  பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும், தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
									
										
			        							
								
																	சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால் மற்றும் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். நேரடியாக வீடுகளுக்கு வந்து இவர்கள் காய்கறிகளை விற்பனை செய்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்த நிலையில் சென்னையில் மூடப்பட்டிருந்த 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.