Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மசாஜ் சென்டரில் பெண்களை கற்பழிக்கும் ரவுடி கும்பல் - சேலத்தில் அதிர்ச்சி

Advertiesment
மசாஜ் சென்டரில் பெண்களை கற்பழிக்கும் ரவுடி கும்பல் - சேலத்தில் அதிர்ச்சி
, செவ்வாய், 8 மே 2018 (11:25 IST)
சேலத்தில் மசாஜ் நடத்தி வரும் பெண்களை மிரட்டி நகை, செல்போன், பணம் பறிப்பதோடு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சினிமா நகரில், நாமக்கல்லை சேர்ந்த சுபிஷா என்பவர் மசாஜ் செண்டர் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி மாலை இவரின் மசாஜ் செண்டருக்கு ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் வந்துள்ளனர். உள்ளே நுழைந்த அவர்கள் உள்பக்கம் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து சுபிஷா மற்றும் அங்கு பணிபுரியும் 21 வயது பெண் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.
 
மேலும், இருவரையும் தனித்தனி அறைகளுக்குள் இழுத்து சென்று கத்திமுனையில் 10 பேரும் கற்பழித்துள்ளனர். அதன் பின்பு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மசாஜ் செண்டருக்கு சென்ற அவர்கள் அங்கு இருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்ததோடு, ஒரு பெண்ணை அறைக்குள் இழுத்து சென்று 3 ரவுடிகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி விட்டு தாங்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி விட்டனர்.
 
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், சேலம் ஜான்சன்பேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான எலும்பன் கார்த்திக், பாலகிருஷ்ணன், விஜயகுமார், விக்னேஷ், அசார் உள்ளிட்ட 10 பேர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், எலும்பன் கார்த்தி, விஜயகுமார், விக்னேஷ் ஆகியோரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகவுள்ள 7 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
 
இந்த ரவுடிகள் சேலத்தில் காந்திரோடு, அழகாபுரம் தோப்புக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மசாஜ் செண்டருக்குள் நுழைந்து பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான 10 நாளில் மனைவியை சுட்டுக் கொன்ற கொடூரன்