மதுரையில் நேற்று இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், எனவே இவர்களை கைது செய்து விசாரிக்க போலீசார் முயற்சி செய்யும்போது இருவரும் போலீசார்களை தாக்கத் தொடங்கியதால் பாதுகாப்பிற்காக போலீசார் சுட்டதில் இரண்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த என்கவுண்டர் மதுரையை மட்டுமின்றி தமிழகத்தையே பெரும் பரபரப்பாக்கி உள்ள நிலையில் என்கவுன்டர் குறித்து தேசிய - மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும் மதுரையில் 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்த 2 காவல் அதிகாரிகளின் துப்பாக்கிகளை விசாரணைக்காக அலங்காநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் இந்த துப்பாக்கிகள் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.