Publish Date: Tue, 29 Mar 2022 (10:31 IST)
Updated Date: Tue, 29 Mar 2022 (10:35 IST)
சேலத்தில் டிராக்டரை ஓட்டி சென்ற சிறுவன் ஓட்டலுக்குள் விட்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையில் உள்ள சிற்றுண்டி உணவகம் ஒன்றில் சிலர் உணவருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது சாலையில் சென்ற டிராக்டர் ஒன்று திடீரென ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு எழுந்தது.
இந்த விபத்தில் உணவருந்த வந்த இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். பரோட்டா மாஸ்டர் மருது படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது டிராக்டரை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து டிராக்டரின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.