Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டி கொலை.. காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
செவ்வாய், 18 மார்ச் 2025 (10:05 IST)
நெல்லையில் இன்று காலை ஓய்வு பெற்ற எஸ்ஐ, அவரது வீட்டின் அருகிலேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை டவுன் காட்சி மண்டபம், தடிவீரன் கோவில் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும், இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சம்பவ இடத்திற்கு நெல்லை காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதிகள் பதற்றமாக இருப்பதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருவதாகவும், நிலத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
நெல்லையில் இன்று காலை மர்ம நபர்களால் ஓய்வு பெற்ற எஸ்ஐ வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments