கன்னியாகுமரி மாவட்டத்தில், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு இரண்டு சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து, அந்த சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, இரண்டு சிறுமிகள் திடீரென மாயமான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமிகளை அவர்களின் தாய் திட்டியதாகவும், இதனால் சகோதரிகள் இருவரும் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்தது.
இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த இரண்டு சிறுமிகளையும் அஜித்குமார் என்பவர் பைக்கில் ஏற்றிச் சென்றதை கண்டுபிடித்தனர். உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அஜித்குமாரை கைது செய்தனர். ஆனால், கைது செய்வதற்கு முன்பே அவர், இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கைதான அஜித்குமார் கழிவறையில் வழுக்கி விழுந்ததில், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம், கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.