Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரிய போராட்டத்தில் மோதல்: 144 தடை உத்தரவு..!

Advertiesment
அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரிய  போராட்டத்தில் மோதல்: 144 தடை உத்தரவு..!

Siva

, செவ்வாய், 18 மார்ச் 2025 (07:33 IST)
கடந்த சில மாதங்களாக, பாபர் மசூதி போல் ஔரங்கசீப் கல்லறையை இடிப்போம் என சில அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரி நடைபெற்ற போராட்டத்தில் திடீரென மோதல் வெடித்ததால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட காரணமாக, அந்த பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. வன்முறை மேலும் பரவாமல் தடுக்க, நாக்பூர் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் அமைதியை காக்குமாறு மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், கல்லறையை சுற்றி 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, "அவுரங்கசீப் கல்லறையை அரசு அகற்றாவிட்டால், பாபர் மசூதியை போல கரசேவை செய்து, கல்லறையை வேரோடு பிடுங்கிவோம்" என பஜ்ரங் தள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்விக் கடன் வழங்க லஞ்சம் வாங்கிய புகார்.. வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை..!