Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடகைதாரர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?

aadhar eb
, திங்கள், 28 நவம்பர் 2022 (14:24 IST)
வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தல் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறி விடுமா என்ற கேள்விக்கு மின்வாரியம் பதில் அளித்துள்ளது
 
வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை மின் இணைப்பில் இணைத்தால் அவரது பெயருக்கு மின்இணைப்பு மாறாது என்றும் வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் மட்டுமே வாடகைக்கு வீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பில் தங்களது ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் வாடகைதாரர் மாறும் போது புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது 
 
மேலும் ஒரு ஆதார் எண்ணை அனைத்து மின் இணைப்புகளுக்கும் இணைக்க முடியும் என்றும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் ஆதார் எண்ணை இணைத்து மட்டுமே ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் மின்வாரியத் துறை அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி.. மகனும் உடந்தை?