Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Advertiesment
Senthil Balaji
, சனி, 26 நவம்பர் 2022 (18:04 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் வரும் 28 ஆம் தேதி  முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை சமீபத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

மின்கணக்கீடு மற்றும் கட்டண முறையை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 
இந்நிலையில் மின்வாரிய கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என வதந்தி பரவியது.


இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி “மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது அவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருந்தாலும் கூட அவற்றிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது செல்தில் பாலாஜி கூறியுள்ளதாவது:

‘’மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் வரும் 28 ஆம் தேதி  முதல் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் மின் கட்டணத்தை எவ்வித சிரமும் இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறைபடி செலுத்தலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.  

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் - மின் இணைப்பு எண்கள் இணைப்பது ஏன்: ஓ பன்னீர்செல்வம் கேள்வி