சென்னையை அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் இருந்த 700 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுபடி பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று தொடங்கிய நிலையில் இந்த நடவடிக்கையை அந்த பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
சென்னை, அனகாபுத்தூர் அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள 700 ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கும் நிலையில் நீதிமன்றம் சமீபத்தில் இந்த வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.