கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
	நேற்று ரஜினி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தேர்தலில் அதிகப்பெரும்பான்மையில் வெற்றி பெற்ற பாஜகவின் வெற்றிக்கு மோடி என்ற தனிமனிதன் அலைதான் காரணம் என்றார். 
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	இந்நிலையில் நாளை மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. கடந்த தேர்தலில் மத்திய நிதி அமைச்சராகப் பதவியேற்ற அருண்ஜெட்லிக்கு இம்முறை மத்திய அமைச்சராக பதவியேற்கும்படி மோடி தரப்பில் அருண் ஜெட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
	 
	ஆனால் தனக்கு உடல் நலம் இல்லாத காரணத்தால் தன்னால் அப்பதவிவி வேண்டாம் என்று அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
	 
	அக்கடிதத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளதாவது :
	கடந்த 18 மாதங்களாக தனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனபே எனக்கு சிலமுறை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வெடுக்க மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளார்கள்.அதனால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
	 
	இந்நிலையில் கடந்தமுறை அருண்ஜெட்லி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவருக்குப் பதிலாக பொறுப்பு நிதி அமைச்சராக இருந்த பியூஸ்கோயல் தற்போது நிதியமைச்சராகக் கூடும் என்று பலரும் எதிர்பார்க்கிறர்கள்.அப்படி பியூஸ் கோயல் நிதிஅமைச்சராகப் பதவியேற்றால் இப்பதவியை ஏற்கும் குறைந்த வயதுடையவர் இவராகத்தான் இருப்பார்.