Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கும் தமிழக போலீஸார்

உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்புவிடுக்கும் தமிழக போலீஸார்
, வியாழன், 26 அக்டோபர் 2017 (11:51 IST)
7வது ஊதியக்குழுவில் முரண்பாடு உள்ளதால் வரும் 30ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க வாட்ஸ்அப் மூலம் காவல்துறையினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.


 

 
தமிழக அரசு 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த உள்ள நிலையில் அதில் காவல்துறையினர்களுக்கு உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்துக்கு வாட்ஸ்அப் மூலம் காவல்துறையினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். 
 
உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து அடுத்தக்கட்ட போராட்டங்களை காவல்துறையினர் அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 
 
10ஆம் வகுப்பு தரத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட பணி, வார விடுப்பு, விடுமுறை தினங்களில் பணியாற்றினால் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப காவலர்களை நியமிக்க வேண்டும். சென்னை போல் மற்ற மாவட்டங்களுக்கும் உணவுப்படி வழங்க வேண்டும். காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதை முற்றுலும் தடை செய்ய வேண்டும். 
 
இந்த கோரிக்கைகளை காவல்துறையினர் நீண்ட காலமாக முன்வைத்து வந்தாலும் தற்போது இந்த உண்ணாவிரத போரட்டம் நடத்த தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையில் நடராஜன் ; வெளியான புகைப்படம்