Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 7 April 2025
webdunia

9 மணி நேரம் இரு மனைவிகளிடம் சிக்கி தவித்த போலீஸார்; குஷியான கணவன்

Advertiesment
இரண்டு மனைவி
, திங்கள், 29 மே 2017 (15:00 IST)
பீகாரில் காவல்துறையினர் பஞ்சாயத்து என்ற பெயரில் சுமார் 9 மணி நேரம் இரு மனைவிகளிடம் சிக்கி தவித்தனர்.


 

 
பீகார் பாட்னாவைச் சேர்ந்த அருண்குமார் நர்ஸிங் ஹோம் நடத்தி வருகிறார். இவருக்கு மீனா என்பவருடன் திருமணமாகி குழந்தைகளும் உள்ளதாம். இந்நிலையில் பூஜா திடீரென வாந்து அருண் தன்னுடைய கணவர் என்று சொந்தம் கொண்டாடியுள்ளார். இதைக்கேட்ட அருணின் மனைவி மீனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
அருண் மீது இருவரும் உரிமை கொண்டாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அருண் குமாரை காவல்நிலையத்துக்கு வரவழைத்தனர். மீனா, தான் அருணின் மனைவி என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்தார். பூஜாவும் அருணின் மனைவி என்பதற்கான ஆதாரங்களை எடுத்து காட்டினார்.
 
இருவரும் ஆதாரங்களை காண்பிக்க போலீஸார் மண்டையை பிய்த்து கொண்டனர். பின் உண்மையை சொல்லாவிட்டால் உங்கள் மீது புகார் கொடுப்பேன் என மீனா கூறியுள்ளார். அதன்பிறகு அருண் இரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார். 
 
இந்த பஞ்சாயத்தில் காவல்துறையினர் வினோத தீர்ப்பு அளித்துள்ளனர். அருணை கைது செய்யாமல் காவல்துறையினர், வாரத்தில் அருண் முதல் மனைவி மீனாவுடன் 3 நாட்களும், இரண்டாவது மனைவி புஜாவுடன் 3 நாட்களும் மீதம் உள்ள ஒரு நாள் தனித்தும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
 
காவல்துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்திய இந்த பஞ்சாயத்து காவல்நிலையத்தில் சுமார் 9 மணி நேரம் நடந்துள்ளது. இதனால் அருண் பெரும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெல்ட்டுக்கு பதிலா பாவடை நாடாவை கட்டிக்கோங்க: பாஜகவை விளாசும் குஷ்பு!