Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்பரம்பாக்கம் ஏரி: 9000 கனஅடியில் இருந்து 1500 கன அடியாக குறைப்பு!

Advertiesment
செம்பரம்பாக்கம் ஏரி: 9000 கனஅடியில் இருந்து 1500 கன அடியாக குறைப்பு!
, வியாழன், 26 நவம்பர் 2020 (07:34 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்த மழை காரணமாகவும் நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாகவும் சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவை நேற்று முன்தினம் எட்டியது 
 
இதனை அடுத்து நேற்று நண்பகல் 12 மணிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. அதன்பின் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் நீரின் அளவு உயர்த்தப்பட்டது 
 
நேற்று இரவு ஒரு கட்டத்தில் 9 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது என்பதும் இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது மழையும் குறைந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது 
 
இதனை அடுத்து படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ள.து சற்றுமுன் வெளியான தகவலின்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 1500 கன அடியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய உலக கொரோனா நிலவரம்! பாதிப்பு 6.07 கோடி, குணமானோர் 4.20 கோடி!