நிவர் புயல் கரையை கடந்தது எப்போது?
வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சரியாக 11 30 மணி முதல் 2 30 மணி வரை கரையை கடந்து உள்ளது
நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்து விட்டதாகவும் இந்த புயல் தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது என்றும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் தெரிவித்துள்ளார்
மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணிக்கப்பட்ட இருந்தாலும் நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு பதினொன்று முப்பது மணிக்கு கரையை கடக்க ஆரம்பித்தது 3 மணி நேரத்தில் கரையை கடந்தது என்றும் இரண்டு முப்பது மணிக்கு முழுவதுமாக கரையை கடந்து விட்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மீட்பு படையினர் தீவிர பணியில் உள்ளதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்