ராஜஸ்தானில் உள்ள ஒரு பகுதியில் மக்கள் மழை வெள்ளம் குறித்து அமைச்சரிடம் புகாரளித்த நிலையில் அவர் பகவான் கிருஷ்ணரை கைக்காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் பஜன் லால் சர்மா முதலமைச்சராக இருக்கிறார். சமீபமாக ராஜஸ்தானில் கனமழை பெய்த நிலையில் அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் ஓடும் ஜோஜாரி ஆற்றில் ஏராளமான தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் நிலையில், அதோடு வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி வீடுகள் கழிவுநீரில் மூழ்கின.
இதுகுறித்து சமீபத்தில் அப்பகுதிக்கு சென்ற ராஜஸ்தான் இணை மந்திரி கே.கே.விஷ்ணோய் என்பவரிடம் மக்கள் புகார் அளித்துள்ளனர். அதற்கு அவர் “பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதலமைச்சர் பகவான் கிருஷ்ணரை வேண்டும்போதெல்லாம் இங்கு மழை கொட்டி தீர்க்கிறது. பிறகு இந்திரனிடம் சொல்லி மழையை தணித்து இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டி இருக்கிறது” என பேசியுள்ளார்.
இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இணை மந்திரியின் இந்த கருத்தை விமர்சித்த ராஜஸ்தான் காங்கிரஸ், மனிதர்கள் உருவாக்கிய பிரச்சினைக்கு பொறுப்பை கடவுள் மிது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளதாகவும், அவர்களால் அந்த பிரச்சினையை சரி செய்ய முடியாது என்றும், கடவுளிடம் வேண்டுங்கள் என்ற அர்த்தத்திலும் அவர் பேசுவதாக விமர்சித்துள்ளது.
Edit by Prasanth.K