நாளை முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில காலமாக மிதமான மழை தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் நிலையில், ஆகஸ்டு மாத தொடக்கம் முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என கூறப்பட்டது. அவ்வாறாக நாளை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என மஞ்சள் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K