Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரத்திவிட்ட தேசியக் கட்சிகள்; ஒன்றும் ஆகாதது போல் பம்மாத்து பண்ணும் கமல்

துரத்திவிட்ட தேசியக் கட்சிகள்; ஒன்றும் ஆகாதது போல் பம்மாத்து பண்ணும் கமல்
, வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (16:39 IST)
கமல்ஹாசனுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பாததாலேயே தற்பொழுது மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
தேர்தலுக்காக திமுக அல்லது அதிமுக வோடுக் கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது என கமல் நினைப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட்டணி குறித்து பேசிய அவர் ‘ நாங்கள் சுத்தமாக உள்ளோம். யாரோடும் கைகுலுக்கி எங்கள் கையை கரையாக்கிக் கொள்ள விரும்பவில்லை’ எனத் தெரிவித்தார்.
webdunia
 
கமல் இப்படி கூறியது ஒரு பக்கம் வரவேற்கும் விதமாக இருந்தாலும் கூட, இவரின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளவே முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் கமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். காங்கிரஸுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் திமுக அல்லாத காங்கிரஸுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவிப்பதாகவும் கமல் தெரிவித்திருந்தார். ஆனால் கமலின் மக்கள் நீதி மய்யத்தால் திமுக எனும் மாபெரும் இயக்கத்தை பகைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை. ஆதனால் கமலை காங்கிரஸ் கழற்றிவிட்டது.
webdunia
 
இதனையடுத்து தான் கமல் கூட்டணி முடிவை கைவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். நாங்கள் சுத்தமாக உள்ளோம். யாரோடும் கைகுலுக்கி எங்கள் கையை கரையாக்கிக் கொள்ள விரும்பவில்லை என கனக்கச்சிதமாக கூறியிருக்கிறார்.
 
கமலுக்கு ஒரே ஒரு கேள்வி தான். மாநிலக் கட்சிகளாகட்டும் சரி, தேசியக் கட்சிகளாகட்டும் சரி, ஊழலற்ற கட்சி என்று யாரையும் சொல்லி விட முடியாது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இந்த கட்சிகள் அனைத்தின் மீதுமே பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.
webdunia
கைகுலுக்கி எங்கள் கையை கரையாக்கிக் கொள்ள விரும்பவில்லை என கூறும் கமல், முதலிலே மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அறிவிக்காதது ஏன்? பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் காங்கிரஸுடன் முதலில் கூட்டணி வைக்க கமல் முற்பட்டது ஏன்? அப்பொழுது அவருக்கு இது தெரியாதா?
 
நான் மற்றவர்களைப் போல இல்லை என கூறும் கமல், என் கொள்கை இது தான், மக்களுக்கு இதை செய்வேன், நான் இவர் கூட தான் கூட்டணி அமைக்க போகிறேன் அல்லது யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என முதலிலே தெளிவாக கூறாமல் வழக்கமாக எல்லா அரசியல்வாதிகள் போல. கடைசி நேரத்தில் சூழ்நிலைக்கேற்றாற் போல முடிவெடுப்பதை போல தானே நடந்து கொள்கிறார்.
webdunia
 
கூட்டணி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டதும் கமல் இப்படி பம்மாத்து பண்ணுகிறாரா என பல்வேறு கேள்விகள் மனதில் எழுகிறது. மாற்றத்தைப் பற்றி பேசும் கமல், வழக்கமான அரசியல்வாதிகள் மாதிரியே நடந்து கொள்கிறார் என்று தான் மக்கள் பலர் நினைகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அசத்திய ரஜினிகாந்த்!