Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை மொக்க பண்ணும் அதிமுக அமைச்சர்கள்!!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:43 IST)
8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வராது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. 
 
திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும், வேதனை மிகுந்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பேசினார்.  
 
இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார். அப்போது அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? மக்கள் மனதில் என்ன தீர்மானம் இருக்கிறது என்று பார்க்கவேண்டாவா? 
 
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம் என பேசினார். தற்போது இதையே தான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, 8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. தேர்தல் வரும் போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments