Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னைக்கு சிக்கன் சாப்பிட்டே தீருவேன்! 75 கிமீ பயணம் செய்த பெண்ணுக்கு சோகம்!

இன்னைக்கு சிக்கன் சாப்பிட்டே தீருவேன்! 75 கிமீ பயணம் செய்த பெண்ணுக்கு சோகம்!
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:09 IST)
ஆஸ்திரேலியாவில் சிக்கன் சாப்பிடுவதற்காக 75 கிமீ பயணம் செய்த பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது போல ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்திற்கோ, வெளியே செல்லவோ அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெல்போர்ன் அருகே பிராதான சாலையில் நள்ளிரவில் பெண் ஒருவர் காரில் சென்றுள்ளார். அவரை வழிமறித்த போலீசார் எங்கே செல்கிறார் என விசாரித்துள்ளனர். முதலில் தனது காதலனை பார்க்கப்போவதாக கூறிய அந்த பெண் போலீஸார் இடைவிடாத கேள்வியால் தான் சிக்கன் சாப்பிட விரும்பியதாகவும், தங்களது பகுதியில் ஊரடங்கால் கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் 75 கிமீ பயணித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறியதற்கு தண்டனையாக அந்த பெண்ணுக்கு 1,652 டாலர் அபராதமாக விதித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதன் தாக்கம் புரியாமல் இதுபோன்று சிலர் விதிகளை மீறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யப்படும்?