Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

Advertiesment
விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

Mahendran

, வியாழன், 28 மார்ச் 2024 (11:10 IST)
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அவரது தமிழக வெற்றி கழகம் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.

இந்த நிலையில் விஜய்யுடன் இணைந்து அரசியல் செய்ய தயார் என ஏற்கனவே சீமான் கமல்ஹாசன் உள்ளிட்டவர் கூறிய நிலையில் தற்போது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அவர்களும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த கேள்வி ஒன்றாக பதிலளித்த போது ஜனநாயக நாட்டில் யாரும் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த நிலையில் அரசியல் வந்துள்ள அவர் மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கும் போது அவருடன் இணைந்து பணியாற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் மகனின் இந்த அறிவிப்புக்கு விஜய் தரப்பிலிருந்து என்ன ரியாக்ஷன் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: ஒற்றைச் சாளர முறை அமல்?