இந்திய குடிமகன்கள் அல்லாதவருக்கு குடும்ப அட்டை வழங்க கூடாது என வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் குடும்ப அட்டை வழங்க கூடாது என்றும் அரசின் வேட்டி சேலைகள் பிஓஎஸ் எந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்திருக்கக் கூடாது என்றும் பணி நாட்களில் ரேஷன் கடைகளை காலை 9 மணிக்கு திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நபர் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்துள்ளாரா என்பதை கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆதார் உடன் வங்கி கணக்கை இணைக்க ரேஷன் அட்டைதாரிடம் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.