Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: பிரதமர் இரங்கல்

Advertiesment
முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: பிரதமர் இரங்கல்
, செவ்வாய், 2 ஜூன் 2020 (07:26 IST)
முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு
முன்னாள் தமிழக பாஜக தலைவரும், முன்னாள் மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.லட்சுமணன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 92
 
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கே.என். லட்சுமணன் இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாகவும், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன், ஒருமுறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கே.என். லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘தமிழக மக்களுக்கு பணியாற்றுவதிலும் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய வைத்ததிலும் பெரும் பங்காற்றியவர் லட்சுமணன். அவசரநிலை காலத்தில் அவரது பங்களிப்புகள் நினைவுகூறத்தக்கவை. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். 
 
மேலும் கே.என்.லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் 5 பணிமனைகளில் இருந்து 148 பேருந்துகள் இயக்க முன் ஏற்பாடுகள் தீவிரம்