என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது – பாமக போராட்டம் குறித்து ராமதாஸ் கருத்து!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:32 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக நடத்தும் போராட்டம் குறித்து சமூகவலைதளம் மூலமாக பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வன்னியர் சமூகத்திற்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தண்டவாளத்தில் சென்ற ரயிலை பாமகவினர் கல்லால் அடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாமகவினர் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் கீழ்ப்பாக்கம் அருகே போக்குவரத்தை இடையூறு செய்யும் விதமாக இளைஞர்கள் சிலர் நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து சமூகவலைதளம் குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் ‘என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது.. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தரை வழி தாக்குதல் நடந்தால் உங்கள் வீரர்கள் காணாமல் போவார்கள்!. அமெரிக்க, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!...

அதெல்லாம் கண்முன்ன வந்து போகும்ல!.. விஜயின் ரோட் ஷோவுக்கு பர்மிசன் இல்லை.. போலீஸ் ஆலோசனை!..

விஜய்க்கு பொண்டாட்டியா இருப்போம்!.. விபச்சாரிகளை அப்டிதான் சொல்ல முடியும்.. மன்னிப்பு கேட்க மறுக்கும் பொன்ராஜ்..

வாக்காளர் பட்டியலில் BLO பெயரே இல்லையா? மேற்குவங்கத்தின் தேர்தல் கூத்து..!

போர் முடிய போகிற நேரத்தில் கச்சா எண்ணெயை வாங்கி குவிக்கும் இந்தியா.. குழப்பத்தில் உலக நாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments