வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த போராட்டம் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
போராட்டம் செய்யும் போராட்டக்காரர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களை மறித்ததோடு ரயில்கள் மீது கல் வீசி எறியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை வரும் புறநகர் ரயில்சேவை நிறுத்தப்படுவதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் மூலம் பாமகவினர் சென்னைக்கு வருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி தாம்பரம் அருகே ரயில் மீது பாமகவினர் கல்வீசி தாக்கியதும் ரயில் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்யும் பாமகவினர் அறவழியில் போராட வேண்டும் என்றும் பேருந்து மற்றும் ரயில் மீது கல்லெறிந்தால் இட ஒதுக்கீடு கிடைத்துவிடுமா என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்