Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 17 April 2025
webdunia

ஏழைகளின் தோழனாக இரு... ரயில்வேக்கு ராமதாஸ் கண்டனம்!

Advertiesment
ரயில்வே
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (08:51 IST)
எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டிகளை நீக்க முடிவெடுக்கப்பட்டது வண்மையாக கண்டித்துள்ளார் பாமக தலைவர் ராமதாஸ். 
 
எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி உள்ள பெட்டிகளை நீக்கிவிட ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. ஆம், மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதியுள்ள பெட்டிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக முழுக்க முழுக்க குளிர் சாதன வசதியுள்ள படுக்கைகளை மட்டுமே இணைக்க ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.  
 
டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா மார்க்கங்களில் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட வருகிறது. இதனால் படுக்கை வசதி பெட்டிகள் அகற்றப்பட உள்ளதாம். 
 
இந்நிலையில் இதனை வண்மையாக கண்டித்துள்ளார் பாமக தலைவர் ராமதாஸ். அவர் கூறியதாவது, மணிக்கு 130 கிலோ மீட்டருக்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்து பெட்டிகளும் ஏசி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. 
 
இது ரெயில்களில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும். அனைத்து ரயில்களிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம்பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடரவேண்டும். ரயில்வே துறை ஏழைகளின் தோழனாக தொடரவேண்டும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

25 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு!