நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்ட நிலையில் கட்சி பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது கட்சியை பதிவு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தமிழருவி மணியன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுடன் ரஜினி ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி கூறியது போல கட்சி வேறு, ரசிகர் மன்றம் வேறு என பிரித்தே செயல்படுவது என முடிவெடுத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அதனால்தான் கட்சி குறித்த அறிவிப்பின் போது தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோர் இருந்தும் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை அழைக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும்போதெல்லாம் நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அதிரடி அரசியலுக்கு சரிபட மாட்டார்கள் என அபிப்ராயப்படுவதாகவும் பேசப்படுகிறது. மேலும் சரிவராத நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய நபர்களை நியமிக்கவும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியின் கட்சியில் பதவி கிடைக்கும் என ஆசைப்பட்ட நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணம் சம்பாதிபதற்காக கட்சி தொடங்கவில்லை. மக்கள் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள்தான் கட்சிக்கு தேவை” என இதைதான் ரஜினி சூசகமாக கூறினாரோ என பேசிக்கொள்ளப்படுகிறது.