Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் எதையோ துண்டுசீட்டில் எழுதிவைத்து பேசுவதுசரியல்ல -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மு.க.ஸ்டாலின் எதையோ துண்டுசீட்டில் எழுதிவைத்து பேசுவதுசரியல்ல -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (23:19 IST)
கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்துவதில் ஊழல் என்று ஆதாரமற்ற  குற்றச்சாட்டு சொல்லி வருகின்றார் ஸ்டாலின். அதனையடுத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆயிரக்கணக்கில் ஊழல் என்று சொல்லி வருகின்றனர்.

தினந்தோறும் அரசு மீதும், முதல்வர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார் ஸ்டாலின்.போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு விருதுகளை இந்திய அளவில் பெற்றுள்ளது.Fc எடுக்க செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்றும், அமைச்சர் சொல்லும் நிறுவனங்களில் தான் வாங்க வேண்டும் என எந்த உத்தரவையும் பிறக்கப்படவில்லை. மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வாகங்களில் ஒளிரும் பட்டைகள் பொறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒரிஜினல் பட்டை விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும், அதற்கும் தடையாணை பெறப்பட்டுள்ளது.வேக கட்டுப்பாடு கருவிகள் பொறுத்துவது தொடர்பாக லாரி சங்கத்தினர் குற்றம்சாட்டு சொல்லி வருகின்றனர். அது பொய்யான குற்றச்சாட்டு என்றும், ஆதாரமற்றது என்றார்.வேக கட்டுப்பாட்டு கருவி 2017 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.1.12.2019 முதல் முறையாக செய்ய வேண்டும் என்று ஜி.பி.எஸ் பொறுத்த15 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.10 நிறுவனங்கள் வேக கட்டுப்பட்டு கருவி பொறுத்த விண்ணப்பித்து இருந்தார்கள் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.2 நிறுவனங்களுக்கு ஒளிரும் பட்டைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வேக கட்டுப்பாட்டு கருவிகள் தற்போது புதிதாக வரும் வாகனங்களுடன் வருகிறது. அவற்றை இணைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை அவற்றை மென்பொருளுடன் இணைக்க வேண்டும் என்றார்.தேசிய நெடுஞ்சாலையில் 24 கோடிக்கு மதிப்பில் டெண்டர் 2019 விடப்பட்டது. ஆனால் கொரனோ கால கட்டம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டது.

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இருந்து 23 கோடி டெண்டரை கோரப்பட்டுள்ளதை 900 கோடி டெண்டராக உயர்த்தப்பட்டதாக ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் ஸ்டாலின்  சொல்கிறார். அதை நிரூபிப்பாரா? மேலும், ஸ்டாலின் பஸ்ஸில் மேற் கூரை ஒழுகுவதாக குற்றம் சாட்டுகிறார்.2012ல் வாங்கப்பட்ட பேருந்துகள் அவை. தற்போது அந்த நடைமுறை இல்லை. அப்போது அமைச்சராக இருந்தவர் தற்போது அவர் கட்சியில் இருக்கிறார். அவரிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளட்டும் என்று செந்தில் பாலாஜியை சாடினார்.மேலும், போக்குவரத்துதுறை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதை குற்றம் சாட்டுகிறார். போக்குவரத்து துறையில் என்னுடைய கால கட்டத்தில் 3 துறை செயலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதற்கு பதிலாக தான் அவர்கள் நியமிக்கப்பட்டனர்.மேலும், எப்போதும்போலஅரசியல்ஆதாயத்திற்காகதிமுகதலைவர்மு.க.ஸ்டாலின்., நாள்தோறும் துண்டுசீட்டில்எழுதிக் கொடுக்கும் அறிக்கையை வெளியிட்டு வருகிறார்.

சிறப்பாக நடைபெறுன் அம்மாவின் ஆட்சியை பொறுத்து கொள்ள முடியாத ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.பள்ளி, கல்லூரி பேருந்துகளில் மட்டும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொறுத்த வேண்டும் என்பது கட்டாயம். அதை பொறுத்த தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பித்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும். ஒளிரும் ஸ்டிக்கர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வேக கட்டுப்பாட்டு கருவி 4000 தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனை 10000 ரூபாய்க்கு விற்பனை செய்யவதாக குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின். 2014 நடைமுறையில் இருந்து வருகிறது. கட்டுப்பாட்டு அறை பொறுத்தப்பட்ட பிறகு அவை முழுமையாக செயல்படுத்தப்படும். மத்திய அரசிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெற்று தான் பொறுத்த வேண்டும். எந்த வாகனத்திற்கும் வரி நிரணயம் செய்யவில்லை, நம் மாநிலத்தில் பழைய நடைமுறையே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். பேட்டியளித்த லாரி உரிமையாளர் சங்கத்தினரை நான் பார்த்தது கூட இல்லை.

மாட்டு வண்டியில் மணல் அள்ளி லாரிகளில் கடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்காக அனுமதி சீட்டு பெற்று மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நேற்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கிடையில் ஒரு சிலர் தன்னால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் விடிவு காலம் வந்து விட்டதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றம் வழிமுறைப்படி மாட்டு வண்டியில் மணம் அள்ள உத்தரவு வர இருக்கிறது. யாருடைய தூண்டுதலால் வழக்கு தொடரப்பட்டது என்பது மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு தெரியும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா உறுதி ! 13 பேர் பலி