Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

25 வருஷமா நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லி ஏமாற்றல.. ரஜினி!!

25 வருஷமா நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லி ஏமாற்றல.. ரஜினி!!
, வியாழன், 12 மார்ச் 2020 (10:49 IST)
இனி யாரும் ரஜினி 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறுகிறார் என கூற வேண்டாம் என ரஜினி கூறியுள்ளார். 
 
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர் பேசி வருவதாவது, ஏமாற்றம் என நான் குறிப்பிட்டது என்ன என்பது குறித்தும் கட்சி குறித்த கண்ணோட்டம் பற்றியும் தெரிவிக்கவே இந்த சந்திப்பு.
 
தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என நான் சொன்னது பலவிதமாக வெளியே வந்தன. ஆனால், மாவட்ட செயலாளர்கள் மூலம் எதுவும் வெளியே வரவில்லை என்பது மகிழ்ச்சி. ரஜினி 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லிக்கொண்டே இருக்கிறார் என பேசுகிறார்கள்.
 
ஆனால், நான் அரசியலுக்கு வருகிறேன் என 1996 ஆம் ஆண்டு அறிவிக்கவே இல்லை. 2017 ஆம் ஆண்டு தான் என்னை வாழ வைக்கும் தெய்வங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என கூறினேன். இனி யாரும் ரஜினி 25 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறுகிறார் என கூற வேண்டாம் என சிரித்துக்கொண்டே பேசினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமாற்றம் அடைந்தது எதனால்? ரஜினி கட்சி அறிவிப்பு?: எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!