Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்..

Advertiesment
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்..

Arun Prasath

, திங்கள், 21 அக்டோபர் 2019 (12:54 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வீடுகளை வழங்கினார் ரஜினிகாந்த்.

2018 ஆம் ஆண்டு நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் 12 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டன. இந்த புயலால் அப்பகுதிகளில் பலர் வீடுகளை இழந்தனர். மேலும் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக அரசு உட்பட பல்வேறு தரப்பினரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்தனர்.

அப்போது நாகப்பட்டனம் கோடியக்கரை பகுதியில் வீடுகளை இழந்த 10 பேருக்கு, வீடு கட்டித்தர உறுதியளிக்கப்பட்டது. அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வழங்கினார். அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகள் வழங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்: நிலைகுலைந்த ஜப்பான்