நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேற்று அதிமுக பிரமுகர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று சீமான் மீது அதிமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து பிரச்சாரத்தில் பேசி கேஸ் வாங்கிய சீமான் தற்போது ஜெயலலிதா குறித்து பேசியதால் கேஸ் வாங்கியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணைக்கு ஆஜராக சீமான் சென்றிருந்தார்.
அப்போது அவர் அலிபாபாவும் 40 திருடர்கள் போல் அம்மாவும் 40 திருடர்களும் உள்ளனர். என்ன? அம்மா இப்போது இல்லை. திருடர்கள்தான் இருக்கின்றனர் என்று கூறினார். இதற்காகதான் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, சர்ச்சை கருத்துகளை கூறி, தொடர்ந்து வழக்குகளை சீமான் பெற்று இதன்மூலம் தனது அரசியல் கட்சிக்கு விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணுகிறாரா? அல்லது மக்களின் மனதில் கருணை பார்வையாக தனது கைதை மாற்ற நினைக்கிறாரா என்ற சந்தேகத்தை தனது புகாரில் கேள்வியாக எழுப்பியுள்ளார் அதிமுக பிரமுகர்.