Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி ஆதரவாளர் பாஜகவில் இணையவுள்ளார்?

Advertiesment
ரஜினி ஆதரவாளர் பாஜகவில் இணையவுள்ளார்?
, புதன், 13 ஜனவரி 2021 (22:10 IST)
முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் அரசியல்வாதியுமான  கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார்.

இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தான் திட்டவட்டமாக இனி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டார்.

இருப்பினும் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்து தொடர்து பல்வேறு பிரபலங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த வருடம்  கருத்து வேறுபாடு காரணமாக விலகிய கராத்தே தியாகாராஜன், ரஜினியின் நண்பராவார். அவர் பாஜக கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால் ரஜினி தான் கட்சி தொடங்கவில்லை என்று உறுதியாகத்தெருவித்துவிட்டதால், முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட்சே பயங்கரவாதி இல்லை....தேசபக்தர் - பாஜக எம்பி.சர்ச்சை பேச்சு