Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’நான் ரஜினி ரசிகை… அவர் அப்படி கூறியிருக்கக் கூடாது ’’- கஸ்தூரி

Advertiesment
’’நான் ரஜினி ரசிகை… அவர் அப்படி கூறியிருக்கக் கூடாது ’’- கஸ்தூரி
, புதன், 13 ஜனவரி 2021 (15:53 IST)
ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை கூறாமல் இருந்தால் ரசிகர்களுக்கு இப்போதைய அவருடைய முடிவு ஆதங்கத்தைக் கொடுத்திருக்காது, என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நல கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார்.

இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தான் திட்டவட்டமாக இனி அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டார்.

இருப்பினும் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்து தொடர்து பல்வேறு பிரபலங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
webdunia

இந்நிலையில், நடிகை கஸ்தூரி ரஜினி குறித்து ஒரு கருத்துக் கூறியுள்ளார்; ரசிகர்களின் பல்லாண்டுக் கனவை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு ரஜினி ரசிகையாக அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் ரசிகர்கள் ஆதங்கத்திலுள்ளனர். ரஜினி தனது அரசியல் வருகையை கூறாமல் இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டரால் காசி தியேட்டருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்!