நடிகர் ரஜினிகாந்த், பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் வெளியாகிறது
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நல கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “நான் அரசியலுக்கு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடந்த போராட்டம் வேதனை தருகிறது. அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறி என்னை யாரும் வருத்ததிற்கு உள்ளாக்க வேண்டாம். எனது முடிவையும் அதுகுறித்த விளக்கத்தையும் ஏற்கனவே அளித்துவிட்டேன். எனினும் எந்த பிரச்சினையும் இன்றி கட்டுக்கோப்பாக போராடிய ரசிகர்களுக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இணையதளத்தில் ரஜினிகாந்த், பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவுக்கு ஒரு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் வெளியாகிறது.
அதில், என் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் நேற்று தினம்போராட்டத்தி ஈடுபட்டனர். அவர்கள் என் நற்பெயரைக் கெடுக்கும் பொருட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்கள் வீட்டில் 70 வயதில் சிறுநீரக ஆபரேஷன் செய்த உங்கள் தந்தையை ஓய்வெடுக்கச் சொல்வீர்களா ? இல்லை அரசியலுக்கு வரச் சொல்வீர்களா? என கேள்வி எழுப்புவதாக அந்த கடிதம் வைரலாகி வருகிறது.