Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் இவ்வளோ கெடுபிடி... குழப்பத்தில் ரஜினி மன்றத்தினர்!

Advertiesment
ஏன் இவ்வளோ கெடுபிடி... குழப்பத்தில் ரஜினி மன்றத்தினர்!
, புதன், 11 டிசம்பர் 2019 (18:42 IST)
மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்தவொரு அறிக்கையையும் பகிரக்கூடாது ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை. 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.   
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது.   
 
வரும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, மன்றத்தின் பெயர் கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது. ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.   
இதனைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி  குறிப்பிட்டுள்ளதாவது, 
 
ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்தவொரு அறிக்கையையும் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகவோ மற்றும் மாவட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவோ பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கும் தொடர்பு இல்லை!