Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2021ல் அதிசயம் கண்டிப்பாக நிகழும்! – ரஜினி அண்ணன் உறுதி!

Advertiesment
2021ல் அதிசயம் கண்டிப்பாக நிகழும்! – ரஜினி அண்ணன் உறுதி!
, புதன், 11 டிசம்பர் 2019 (14:17 IST)
ரஜினி சொன்ன அதிசயம் கண்டிப்பாக 2021ல் நடைபெறும் என அவரது சகோதரர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றுக்கு செல்வதற்கு காவேரிப்பட்டினம் மக்கள் சாக்கடை கால்வாய்களை கடந்து சென்று வந்து கொண்டிருந்தனர். மக்களின் தேவையை நிறைவேற்றும் விதமாக கிருஷ்ணகிரி ரஜினி ரசிகர் மன்றத்தினர் மூன்று இடங்களில் 3 லட்சம் மதிப்பில் மக்கள் கடந்து செல்லும் வழியில் சிறு பாலங்களை கட்டியுள்ளனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்த பாலங்களை ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் திறந்து வைத்தார்.

பிறகு பேசிய அவர் ”கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ரஜினி ரசிகர்கள் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோல மக்களுக்கு உதவக்கூடிய பல திட்டங்களை மக்கள் மன்றத்தினர் செய்ய வேண்டும். 2021ல் ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார். மக்களை சந்திப்பார். கண்டிப்பாக 2021ல் அவர் சொன்னப்படியே அதிசயம் நிகழும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”முஸ்லீம்களுக்கு எதிரானதா சட்டத்திருத்தம்??” என்ன சொல்கிறார் அமித்ஷா??