Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”திமுக கூட்டணிக்கு சரியான குட்டு”.. விளாசும் ஜெயகுமார்

Advertiesment
”திமுக கூட்டணிக்கு சரியான குட்டு”.. விளாசும் ஜெயகுமார்

Arun Prasath

, புதன், 11 டிசம்பர் 2019 (15:35 IST)
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் திமுக கூட்டணிக்கு சரியான குட்டு வைத்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படவில்லை என திமுக கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

திமுக உள்ளாட்சி தேர்தலை குறித்து இதற்கு முன் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பார்க்கிறது எனவும், தேர்தலுக்கு திமுக அஞ்சுகிறது எனவும் அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.
webdunia

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ”உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் திமுக கூட்டணிக்கு சரியான குட்டு வைத்துள்ளது” என கூறியுள்ளார். மேலும் அவர், “உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக கையாண்ட யுக்திகள் தோல்வியடைந்துள்ளன” எனவும் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரு கேட்டா உன் ஆதரவ...? சூப்பர் ஸ்டாரை சீண்டிய சுப்ரிம் ஸ்டார்!