Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தின் கடைசி நம்பிக்கை ரஜினி! – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

Advertiesment
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை ரஜினி! – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
, ஞாயிறு, 24 நவம்பர் 2019 (12:36 IST)
ரஜினிகாந்த் அரசியலில் கிட்டத்தட்ட களமிறங்கிவிட்ட நிலையில் அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினாலும் இன்னமும் தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதற்குள் தேவைப்பட்டால் கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற அவரது அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல கட்சி பிரமுகர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்து கருத்துகளை தெரிவித்தனர். அதில் உச்சபட்சமாக பாஜக சுப்பிரமணிய சுவாமி ”சினிமா கூத்தாடிகள்” என ரஜினி, கமலை விமர்சித்தது அவரது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் #TNLastHopeRAJINI என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. இதன்மூலம் தனக்கு உள்ள ரசிகர்கள் பலத்தை நிறுவ ரஜினி முயற்சிக்கிறாரோ என அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சநீதிமன்றம் சொன்னதால் விசாரிக்கிறோம்! – குட்டு வாங்கிய பாஜக வழக்கறிஞர்!