இன்று மாலை 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mahendran
புதன், 21 ஆகஸ்ட் 2024 (14:56 IST)
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துக் விடுக்கப்பட்டுள்ளது.
 
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

ஜோதிமணி எம்பி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments