Publish Date: Wed, 21 Aug 2024 (10:53 IST)
Updated Date: Wed, 21 Aug 2024 (10:55 IST)
இன்று ஒரே நாளில் ஒரு சவரன் 400 ரூபாய் தங்கம் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தங்க நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பட்ஜெட்டில் வரிகுறைப்பு அறிவிப்புக்கு பின் தங்கம் விலை குறைந்தாலும் சமீப காலமாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது என்பதும் ஒரு சவரன் 53 ஆயிரத்தை தாண்டி 54 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 50 ரூபாயும் ஒரு சவரன் 400 ரூபாயும் தங்கம் விலை உயர்ந்தது உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,710 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 53,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,165 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது