Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்று மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

Advertiesment
Chennai electric train

Siva

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (07:54 IST)
சென்னையில் இன்று 8 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:

1. சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் ஆக. 22, 24 தேதிகளில் காலை 9.10 மற்றும் 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து

2. சென்ட்ரல் - திருத்தணிக்கு   ஆக. 22, 24 தேதிகளில் காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி ரத்து

3. அரக்கோணம் - சென்ட்ரலுக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை 11.15, நண்பகல் 12 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து

4. திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து.

5. வேலூர் கண்டோன்மெண்ட் - அரக்கோணத்துக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி ரத்து.

6.சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே பகுதி ரத்து.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் ஆக.22, 24 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் ரயில் மறியலால் பரபரப்பு..!