இன்று இரவு 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
திங்கள், 14 ஏப்ரல் 2025 (16:40 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இரவு 10 மணி வரை மேற்கண்ட பத்து மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
மேலும், கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தற்போதைய மழை  காரணமாக குளிர்ச்சியான தட்பவெப்பம் உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments