தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில், இது குறித்து சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், "பல்கலைக்கழக வேந்தர்" என்ற முறையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழகத்தின் உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆளுநரிடம் இருந்த அதிகாரங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் வந்துள்ளன. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.