இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (07:59 IST)
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட 6 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சென்னையை பொருத்தவரை, மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அண்ணாமலை - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. பாஜகவில் சேருகிறாரா?

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments